கொரோனா தொற்று எல்லோரையும் பாடாய் படுத்தி வருகிறது. இரண்டு வருடங்களில் யாரும் எதையும் விரும்பியதை அந்த சரியான நேரங்களில் செய்ய முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் கடந்த வருடம் விஜய் நடித்த மாஸ்டர் படமே அதற்கு முன் பலமுறை தள்ளிவைக்கப்பட்டு கடந்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்த வருடமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கும் படங்களை எல்லாம் ஓமிக்ரான் பதம் பார்த்து வருகிறது.
ஓமிக்ரான் தொற்றால் ஜனவரி 6ம் தேதி ரிலீஸ் ஆக இருந்த பிரமாண்ட படமான ஆர் ஆர் ஆர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வலிமை படமும் தள்ளிவைக்கப்படும் என்ற நிலையில் அது ரிலீஸ் ஆகும் என தயாரிப்பு தரப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி ஒரு சூழ்நிலையில் பொங்கலுக்கு நான்கு மொழிகளில் பிரமாண்ட பொருட்செலவில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்து வெளியாக இருந்த ராதே ஸ்யாம் படமும் தள்ளிப்போகிறது ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதனால் பிரபாஸ் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். தமிழிலும் பிரபாஸுக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.