
Entertainment
ரஜினி 169 படத்தின் டைட்டிலை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!
‘அண்ணாத்த’ படத்தை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘தலைவர் 169’ படத்தில் ரஜினிகாந்த், நடிக்கவுள்ளார்.ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற போதும் ரசிகர்களை திருப்தி படுத்த தவறியது. எனவே அடுத்த படத்தை மெகா ஹிட்டாக்கும் முயற்சியில் ரஜினி இறங்கியுள்ளார்.
தற்போழுது ரஜினி நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்துவருகிறார்இந்த படத்தில் திரைக்கதையை மட்டும் மூத்த இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் வடிவமைக்கிறார்.
இந்நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ரஜினியுடன் படத்தில் இணையயுள்ளார் என உறுதியான தகவல் கிடைத்துள்ளது.
இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்,பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிகையுள்ளார்.படப்பிடிப்பை ஆகஸ்டு மாதம் தொடங்கி பொங்கல் பண்டிகையில் திரைக்கு வர திட்டமிட்டுள்ளனர்.
மேலும் ஆகஸ்டு மாதம் தொடங்கும் படப்பிடிப்பிற்காக தற்போது இருந்தே ஹைதராபாத்தை செட் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாக தகவல் வந்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தை குறித்து நீண்ட நாளாக எந்த விதமான அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்த சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் நேற்று ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.அதில் இன்று காலை 11 மணிக்கு புதிய அப்டேட் ஒன்று வெளியாகும் என குறிப்பிட பட்டிருந்தது.
ஹனிமூன் செல்லாமல் கோவில் கோவிலாக செல்லும் நயன்தாரா! காரணம் தெரியுமா?
