Connect with us

மாஸ்க் போட்டதன் எதிரொலி-சென்னையில் குறைந்தது கொரோனா பாதிப்பு!!

MASK wear

தமிழகம்

மாஸ்க் போட்டதன் எதிரொலி-சென்னையில் குறைந்தது கொரோனா பாதிப்பு!!

நேற்றைய முன் தினம் நம் தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் பல்வேறு விதமான கட்டுப்பாட்டு விதிகள் அறிவிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக பொது இடங்களில் செல்வோர் கட்டாய முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மேலும் பேருந்துகளில் பயணிப்பவர்கள் மட்டுமின்றி ஓட்டுனரும் நடத்துனரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. முகக்கவசம் அணிவதை மீறினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

ஏனென்றால் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு சென்னையில் அதிகமாக பதிவாகி கொண்டு வருகிறது. அதுவும் தினம் தோறும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 1000 பதிவாகி வருவதால் அங்குள்ளோரினிடையே இத்தகைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் ஏழாவது நாளாக ஆயிரத்தை கடந்து பாதிப்பு பதிவாகி உள்ளது. சென்னையில் ஒரு நாள் கொரோனா தொற்று பாதிப்பு 1062 இலிருந்து 1017 ஆக குறைந்துள்ளது.

இருப்பினும் கூட இதர மாவட்டங்களில் கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகமாகவே காணப்படுகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 408 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top