Connect with us

மரணத்திலும் பிரியாத தம்பதி!! கரூரில் சோகம்!!

death 1 1

தமிழகம்

மரணத்திலும் பிரியாத தம்பதி!! கரூரில் சோகம்!!

கரூரில் திருமணமாகி 50 ஆண்டுகாலம் இணைப்பிரியாமல் வாழ்ந்த தம்பதியர் மரணத்திலும் பிரியாமல் ஒன்றாக இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் ஜவஜர் கடை வீதியில் தனியாக வசித்து வந்த ராமகிருஷ்ணன் – ஸ்ரீ லட்சுமி தம்பதியினர். இவரது மனைவி ஸ்ரீ லட்சுமி உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் ராமகிருஷ்ணன் அனைத்து பணிகளையும் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமையல் அறைக்கு சென்றபோது ராமகிருஷ்ணன் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தபோது அவரும் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தபோது அவர்கள்  ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 50 ஆண்டுகாலம் பிரியாமல் ஒன்றாக  வாழ்ந்த  தம்பதியினர் இறப்பிலும் பிரியாமல் இருந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top