Connect with us

மதுபான கடை மீது நாட்டுவெடிகுண்டு வீச்சு… 4 பேர் கைது!

202112131543529179 Tamil News Tamil News Vembakottai near alcohol sales arrest SECVPF

News

மதுபான கடை மீது நாட்டுவெடிகுண்டு வீச்சு… 4 பேர் கைது!

புதுச்சேரி தனியார் மதுபான கடையில் நாட்டு வெடிகுண்டு வீசி விட்டு தப்பி ஓடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி திருவள்ளுவர் சாலையில் உள்ள தனியார் மதுபான கடையில் நேற்று இரவு மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த உருளையன்பேட்டை போலீசார் குபேர் நகரை சேர்ந்த சச்சின், நடராஜ் நகரை சேர்ந்த எழில், தென்னஞ்சாலையை சேர்ந்த பிரதாப், கெளதம் ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

விசாரணையில் சசிக்குமார் என்பவர் இந்த மதுபான கடையில் சப்ளையராக பணிபுரிந்து வந்துள்ளார் என்பதும், நேற்று முன்தினம் இந்த நான்குபேரும் அதே மதுபான கடையில் மது அருந்திவிட்டு மதுபோதையில் அங்கிருந்த சேர்களை உடைத்துள்ளனர், இதனை சசிகுமார் கேள்வி கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

மது போதையில் இருந்த அவர்கள் சசிகுமாரை பீர் பாட்டிலால் தாக்கிவிட்டு சென்றுள்ளனர், இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் வந்து ஆத்திரத்தில் 4 பேரும் வெடிகுண்டை வீசிவிட்டு சென்றதாக தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top