மக்களே உஷார்!! வரும் சனிக்கிழமை முதல் தமிழகத்தில் மழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்..
தமிழகத்தில் கடந்த சில மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வந்தாலும் மற்றொரு பக்கம் வெயில் வாட்டிக்கொண்டுதான் வருகிறது.
இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் சனிகிழமை தமிழகத்தில் மழைக்கு வாய்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமாரி மாவட்டங்களில் ( 17.3.2022) இன்று ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.
நாளை( 18.3.2022) அன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் 19.3.2022 முதல் 21.3.2022 வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.
மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
