’பொன்னியின் செல்வன்’ தமிழ் டீசர் – வெளியிடும் முன்னணி நடிகர் யாரு தெரியுமா?

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6:00 மணிக்கு வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை ஒரே நேரத்தில் வெளியிடுகின்றனர்.

இந்த திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக ஏற்கனவே பட குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, நடிகை ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் பட்டாளமே பணியாற்றியுள்ளனர்.

62c71a17398e0

ஒவ்வொரு திரையுலகிலும் உள்ள முன்னணி நடிகர்களை கொண்டு பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசரை வெளியிடுவதாக படக்குழு முடிவு செய்துள்ளது. தனது தம்பி கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசரை வெளியிடுகிறார் நடிகர் சூர்யா.

தமிழ் டீசரை நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட உள்ளார் . அதே போல் இந்தியில் அமிதாப்பச்சனும், மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் மகேஷ்பாபுவும் வெளியிடுகின்றனர்.

pshome 1654675823 2

போட்டி போட்டு குழந்தையை கொஞ்சும் அஜீத்-விஜய்! ஒரே நேரத்தில் வைரலான புகைப்படங்கள்!

மேலும் கன்னட மொழியில் ரக்ஷித் ஷெட்டி பொன்னியின் செல்வன் டீசரை வெளியிடுகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது தவிர சென்னை டிரேட் சென்டரில் டீசர் வெளியீட்டு விழா எளிய முறையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment