’இந்தியன் 2’ பட நாயகிக்கு கொரோனா உறுதி.. அடுத்தடுத்த சோதனையில் படக்குழு..!

உலக நாயகன் கமல்ஹாசனுடன் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

1994-ல் வெளியான ‘ரங்கீலா’ படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானாவர் நடிகை ஊர்மிளா மடோன்கர். இந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ள இவர், தற்போது இந்தியில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது, ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘இந்தியன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஊர்மிளா நடித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் மற்றும் தலைவலியால் பாதிக்கப்பட்டு இருந்த ஊர்மிளாவிற்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டு உள்ளது.

இதனால், தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட நடிகை ஊர்மிளா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அதில், ”வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.நான் நலமாக இருக்கிறேன். சமீபகாலமாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்” என்று ஊர்மிளா கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகளால் படக்குழுவினர் நொந்துபோய் உள்ள நிலையில், படக்குழுவில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அனைவருமே சோகத்தில் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment