பேருந்து மற்றும் ரயில் களில் புட்போர்டு அடிக்கும் மாணவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை பாயும் என்று பெருநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் மற்றும் தோழன் அமைப்பினர் இணைந்து, சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலையில் உள்ள MCC மேல்நிலை பள்ளியில், ‘‘குழந்தைகளுக்கான பாதுகாப்பு சாலை என்ற தலைப்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமினை துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சங்கர் ஜிவால் பேசியதாவது: சென்னையில் 100 பள்ளிகளில் 25,000 ஆயிரம் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து ஒரு மணி நேரம் விழிப்புணர் ஏற்படுத்தப்பட உள்ளது எனவும் வாரத்திற்கு நான்கு அல்லது ஐந்து நாள் டிராபிக் குறித்து ஸ்பெஷல் டிரைவ் அளிக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.
ரயில் மற்றும் பேருந்துகளில் புட்போர்டு அடிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர் மேலும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது என்றும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை பாயும் என்றும் தெரிவித்தார்.
ஒரு முறை இரண்டு முறை மட்டுமே மாணவர்களுக்கு அறிவுரை வழங்க முடியும் என்றும் அதற்கு மேல் மீண்டும் அவர்கள் அதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ரயில்களில் அட்டகாசத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க சொல்ல பட்டுள்ளதாகவும் பேட்டி அளித்தார்
போதை பொருள் விற்பனை குறித்து தகவல் தரும் பொதுமக்கள் விவரங்களை காவலர்கள் வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கஞ்சா விற்பனை தொடர்பாக நேற்று இரண்டு காவலர்கள் மற்றும் முன்னாள் உதவி ஆய்வாளரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் போதைப் பொருள் கடத்தலில தொடர்புடைய நபர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்
ஆழ்வார்திருநகர் பள்ளியில் வேன் மோதி பள்ளி மாணவன் பலியான சம்பவத்தில் 2 பேர் கைதாகி உள்ளனர். பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது எனவும் கூறினார். கஞ்சா விற்பனை தொடர்பாக யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புகார் தகவல் தெரிவித்தால் ரகசியம் காக்கப்படும் என்றும் கூறினார். 18 வயது கீழ் உள்ள மாணவர்கள் இரு சக்கர வாகனங்களில் பள்ளிகளுக்கு வந்தது தொடர்பாக 300 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் கூறினார்.