
பொழுதுபோக்கு
பிரின்ஸ் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த மாஸான அப்டேட்! எப்போ தெரியுமா?

தமிழ் சினிமாவில் மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டான்’. டான் திரைப்படம் 125 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதை தொடர்ந்து இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை மரியா எனும் உக்ரைன் நாட்டு நடிகை நடித்து வருகிறார்.தமன் இப்படத்திற்கு இசையமைக்கயுள்ளார்.
தமிழ் ,தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் படம் தான் பிரின்ஸ்.இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.
இதற்கு அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் SK 21 படத்தில் நடிக்க இருக்கிறார். கமல் தயாரிப்பில் SK21 படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிப்பதாகவும் படத்தின் பெயர் மாவீரன் என ஒரு தகவல் வந்துள்ளது.இந்த படத்தில் ஹீரோயினாக சாய் பல்லவி நடிப்பதாக கூறப்பட்டது.
சமீபத்தில் SK 22 படம் வெங்கட் பிரபுவுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிக்கயுள்ளார்,இந்த படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிப்பதாக தகவல் வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 2022 ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதத்தில் தொடங்க உள்ளதாக உறுதியாக கூறப்படுகிறது.
சமந்தாவை மிஞ்சிருவாங்க போல அஞ்சலி! டான்ஸ்னா அப்படி இருக்கணும்.. வைரல் வீடியோ!
