பிரபுதேவா பிறந்தநாள்!.. கோட், அனுஷ்கா படங்களில் இருந்து வெளியான ட்ரீட்.. சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

நடன இயக்குநர், நடிகர் மற்றும் இயக்குநராக இந்திய சினிமாவில் வலம் வந்துக்கொண்டிருக்கும் பிரபுதேவா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் தி கோட் படத்தில் நடித்து வருகிறார். பிரபுதேவாவின் 51வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோட் படத்தில் இருந்து பிரபுதேவாவின் பிரத்யேக போஸ்டரை வெங்கட் பிரபு வெளியிட்டார்.

பிரபுதேவா பிறந்தநாள்:

அதே போல மலையாளத்தில் அனுஷ்கா அறிமுகமாகவுள்ள காத்தனார் படத்தில் ராஜா வேடத்தில் பிரபுதேவா நடிக்கவுள்ள நிலையில், அனுஷ்காவின் ஃபர்ஸ்ட் லுக்குக்கு முன்னதாக பிரபுதேவாவின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. பல ஆண்டுகளாக சினிமாவில் பேரும் புகழும் சம்பாதித்து வரும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என கொண்டாடப்படும் பிரபுதேவாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்களையும் இங்கே காணலாம்.

பிரபல நடன இயக்குநர் சுந்திரம் மாஸ்டரின் மகனான பிரபுதேவா நடன இயக்குநராக பல படங்களில் பணியாற்றி வந்த நிலையில் ஹிரோவாக இந்து படத்தில் நடிகை ரோஜாவுடன் நடித்திருநதார். மேலும் இவரது சகோதரர்கள் ராஜு சுந்திரம் மற்றும் நாகேந்திர பிரசாந்த் இருவருமே டான்ஸ் மாஸ்டர்களாக பல படங்களில் பணியாற்றியுள்ளனர். நடிகர்களாகவும் சில படங்களில் நடித்துள்ளனர். மின்சார கனவு படத்தின் வெண்ணிலவே பாடலுக்கு சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதைப் பெற்றார் பிரபுதேவா.

பிரபுதேவா ராம்லதா என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. அதில் மூத்த மகன் 2008ம் ஆண்டு இறந்துவிட்டான். மேலும் நடிகை நயன்தாராவுடன் பிரபுதேவா வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் அவர் மனைவி ராம்லதா தன் கணவரை மீட்டு தருமாறு வழக்கு தொடர்ந்தார். அவருக்காக பலரும் குரல் கொடுத்த நிலையில் நயன்தாரா பிரபுதேவாவை விட்டுப் பிரிந்து சென்றார்.

முதல் மனைவியை விவாகரத்து செய்த பிரபுதேவா டாக்டர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார் அவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தையும் பிறந்தது.
பிரபுதேவா காதலன், மிஸ்டர் ரோமியோ, நாம் இருவர் நமக்கு இருவர், காதலா காதலா, சுயம்வரம், வானத்தை போல உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். மேலும், இதயம் , வால்டர் வெற்றிவேல், அக்னி நட்சத்திரம் போன்ற படங்களில் நடமாடியும் உள்ளார். அதை தொடர்ந்து போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி ஆகிய பல படங்களை இயக்கியும் உள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடன இயக்குநராகவும், இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

சொத்து மதிப்பு:

தற்போது பிரபுதேவா வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் தி கோட் படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து அவர் இயக்குநர் மனோஜ் என்.எஸ்.இயக்கத்தில் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் யோகிபாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். மேலும், இன்று தனது 51ஆவது பிறந்தநாளை கொண்டாடிவரும் பிரபுதேவாவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவருக்கு 150 கோடி ரூபாய் வரை சொத்து இருப்பதாகவும் சென்னை மற்றும் மும்பையில் சொகுசு வீடுகளும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.