ஹெல்மெட் அணிந்த இளைஞர் ஒருவர் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகள் மத்தியில் கெத்து காட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இன்றைய இளைஞர்கள் பள்ளி மற்றும் கல்லூரி பெண்களை ஈர்ப்பதற்காக பல்வேறு செயல்களை செய்து வருகின்றனர் என்பதும் அது பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் புதுச்சேரியில் ஹெல்மெட் அணிந்து நடந்து வந்த இளைஞர் ஒருவர் பேருந்து நிலையம் அருகே பள்ளி மாணவிகள் பலர் நிற்பதை பார்த்ததும் திடீரென சாலையில் உட்கார்ந்து அதன் பின் அவர் தண்டால் எடுக்கும் செயலில் ஈடுபட்டார்.
அவரை மாணவிகள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடைஞ்சலாக அவர் செய்த செயல் இருந்தது.
இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருவதை அடுத்து அவர் யார் என்பதை புதுவை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அவரை கண்டுபிடித்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
பெண்களை ஈர்ப்பதற்காக இது போன்ற கோமாளித்தனமான செயல்களை செய்யாமல் புத்திசாலித்தனமான செயல்களை செய்தால் பெண்கள் இளைஞர்களை தேடி வருவார்கள் என்று கூறப்படுகிறது.