நெட்பிளிக்ஸ் பாஸ்வேர்டை பகிர்ந்தால் கிரிமினல் வழக்கு: எச்சரிக்கை விடுத்த அரசு

நெட்பிளிக்ஸ் பாஸ்வேர்டை உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பகிர்ந்தால் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பாயும் என இங்கிலாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகின் முன்னணி ஓடிடி நிறுவனங்களில் ஒன்றான நெட்பிளிக்ஸ் வருமானம் பெருமளவு குறைந்துள்ளதாகவும் இதுகுறித்து ஆய்வு செய்தபோது நெட்ப்ளிக்ஸ் வாடிக்கையாளர்கள் தங்கள் பாஸ்வேர்டை தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் மற்றும் உறவினருக்கும் பகிர்ந்து வருவதாகவும், அதனால் ஒரே ஒரு சப்ஸ்க்ரைபை வைத்து பலர் பார்த்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் அளித்த புகாரை அடுத்து இங்கிலாந்து அரசு தற்போது எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி பாஸ்வேர்டை நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ பகிர்ந்தால் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பாயும் என்றும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்து அன்சப்ஸ்கிரைப் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.