நாட்டுப்புற பாடகர் வேல்முருகனின் வேண்டியதை தா முருகா பாடல் வெளியீடு!

மதுரை குலுங்க குலுங்க பாடலின் மூலம் பிரபலம் ஆனவர் நாட்டுப்புற பாடகர் வேல்முருகன். இவர் அந்த பாடல் மட்டுமின்றி ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா உள்ளிட்ட பாடல்களையும் பாடியவர்.

சில மாதங்களுக்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

திரையுலகில் பரபரபப்பான பின்னணி பாடகராக இருக்கும் வேல்முருகன் ஹோட்டலும் நடத்துகிறார்.

சில நேரங்களில் பக்தி ஆல்பங்களும் வெளியிடுகிறார். பெயருக்கேற்றபடி அடிக்கடி முருகன் மீது பக்தி பாசுரங்களை பாடி ஆல்பமாக வெளியிட்டு வருகிறார்.

இன்று தைப்பூசத்தை முன்னிட்டு வேண்டியதை தா முருகா என்ற ஆல்பம் பாடலை அவர் வெளியிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment