நண்பன் படம்.. இவ்வளவு நீள டயலாக்.. விஜய் ஒரே டேக்கில் முடிச்சாராம்..!!

Vijay: இளைய தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நண்பன். சங்கர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஸ்ரீகாந்த், ஜீவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

கல்லூரியில் மாணவனாக விஜய் நடித்த இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. தளபதி விஜய் அவர்களின் நடிப்பு ஒவ்வொரு படத்திலும் பாராட்டும் விதமாக அமைந்திருக்கும்.

விஜய் தேவரகொண்டா டிரெஸ்ஸ கூட விடலையே ராஷ்மிகா!.. காதலை சும்மா டீகோட் பண்ண விடுறாங்களே!

பஞ்சவன் பாரி வேந்தன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த விஜய் படத்தின் கதைப்படி படிப்பு முடிந்தவுடன் காணாமல் போய்விடுகிறார். அவரை இரண்டு நண்பர்கள் தேடும்போது நினைத்து பார்க்கும் ஃப்ளாஷ்பாக்குகள் தான் மொத்த கதையுமே.

இந்த படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் நகைச்சுவை நிறைந்ததாக அமைந்திருக்கும். அப்படி இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி விஜய் அவர்களின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளது.

லியோவில் விஜய் மகனாக மேத்யூ தாமஸ்.. இவரை தேர்ந்தெடுக்க என்ன காரணம்.. வெளியான தகவல்..!

ஒரு காட்சியில் இயந்திரத்திற்கு விரிவாக்கம் சரியாக சொல்லவில்லை என்று வகுப்பை விட்டு பஞ்சவன் பாரி வேந்தன் வெளியில் அனுப்பப்படுவார். பின்னர் மீண்டும் அவர் வகுப்புக்குள் வரும்போது ஆசிரியர் எதற்காக வந்தாய் என்று கேட்க மறந்துட்டேன் என்று சொல்வார்.

அப்போது அந்த ஆசிரியர் எது என்று கேட்டதும் ஒரு மிகப்பெரிய விளக்கமே ஆங்கிலத்தில் பாரி கொடுத்திருப்பார். அவர் அந்த விளக்கத்தை சொல்லி முடிக்கும் வரை அனைவரும் ஆச்சரியமாக அவரை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

அவர் சொல்லி முடித்ததும் அந்த ஆசிரியரே அப்படி என்றால் என்ன என்று கேட்க புத்தகம் என்று எளிமையாக சொல்லுவார். இந்த காட்சியை விஜய் அவர்கள் ஒரே டேக்கில் முடித்ததாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

மீண்டும் போட்டோகிராஃபரான விஜய்!.. இப்போ தாய்லாந்தில் யாரை போட்டோ எடுத்திருக்காரு பாருங்க!..

படத்தில் மட்டுமல்லாது டப்பிங்கிலும் விஜய் அவர்கள் முழு நீள விளக்கத்தை ஒரே டேக்கில் முடித்துள்ளார். இந்த காட்சியிலும் விஜய் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.