தீர்த்தமலை அனுமன் தீர்த்தம்

தர்மபுரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் மிக முக்கிய தீர்த்த ஸ்தலம் அனுமான் தீர்த்தம் ஆகும். இந்த அனுமான் தீர்த்தம், இராமாயணத்துடன் தொடர்புள்ள தீர்த்தம் ஆகும்.தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரைக்கு சில கிமீ தொலைவில் தீர்த்தகிரீஸ்வரர் ஆலயத்தில் இந்த அனுமான் தீர்த்தம் அமைந்துள்ளது.

இது ஹனுமந்த தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

இங்குள்ள  தீர்த்தமலை மிக முக்கிய புண்ணிய ஸ்தலம் ஆகும். எனவே தீர்த்தமலைக்கு வருவோர் கண்டிப்பாக அனுமான் தீர்த்தத்தைக் கண்ட பின் தான் தீர்த்தமலை செல்வர் என்பது நியதி. மேலும் அனுமான் தீர்த்தம் ஒரு முக்கியமான சுற்றுலா ஸ்தலமாகும். ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தோடு இந்த அனுமான் தீர்த்தத்திற்கு வருகை தருகின்றனர்.

அனுமான் தீர்த்தம் இருக்கும், தீர்த்தகிரீஸ்வரர் ஆலயம் தென்பென்னாற்றின் கரையில் அமைந்திருக்கிறது. இந்து சமய புராணத்தில் இந்த ஆலயம் இருக்கும் பகுதிக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. அதாவது அனுமான் ஒரு கிண்ணம் கங்கை நீரை இந்த பகுதியில் தெளித்ததாக இந்த சமய புராணம் தெரிவிக்கிறது. மேலும் இந்த பகுதியில் இருக்கும் ஒரு பாறையில் இருந்து ஒரு நீரூற்று வருகிறது. இதன் தண்ணீர் மிக இனிப்பாக இருக்கும். இந்த நீரூற்றின் சிறப்பு என்னவென்றால் பென்னாற்றில் நீர் வற்றினாலும் இந்த நீரூற்று மட்டும் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும்.

இந்த பகுதிக்கு சென்றால் அனுமன் தீர்த்தத்தை கண்டு களிக்க மறவாதீர்கள்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.