டிஎன்பிஎஸ்சி குரூப் 4: பிரித்தெழுதுக- பகுதி 1

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பொதுத் தமிழ் பிரிவில் பிரித்தெழுதுக சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். இப்பகுதியில் எப்படியான கேள்விகள் கேட்கப்படும் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

 

பிரித்தெழுதுக:

தாமுள – தாம்   + உள

யாரவர் – யார்   + அவர்

தற்பிறர் – தன்   + பிறர்

அறனல்ல – அறன் + அல்ல

மூலமொழி – மூலம் + மொழி

பேரறம் – பெருமை + அறம்

பெருந்தொழில் – பெருமை + தொழில்

தமிழெழுத்து – தமிழ் +  எழுத்து

தண்டமிழ் – தண்மை   +  தமிழ்

பல்கலை – பல +  கலை

செவிச்செல்வம் – செவி +  செல்வம்

அவியுணவு – அவி  +  உணவு

அஃதொருவன் – அஃது  +  ஒருவன்

பிழைத்துணர்ந்து – பிழைத்து +  உணர்ந்து

சுவையுணர – சுவை  +  உணர

ஏடாயிரம் – ஏடு  +  ஆயிரம்

ஏதிரிலா – எதிர்  +  இலா

விடுக்குமோலை – விடுக்கும் +  ஓலை

சிரமசைத்திடும் – சிரம்  +  அசைத்திடும்

சீரில்       – சீர் +  இல்

பயனில்     – பயன்  +  இல்

மெய்தானரும்பி – மெய்தான் + அரும்பி

விதிர்த்துன் – விதிர்த்து +  உன்

சிற்றூர் – சிறுமை +  ஊர்

நன்மொழி – நன்மை +  மொழி

என்றிரந்து – என்று +  இரந்து

பொற்கிழி – பொன் +  கிழி

இன்னுயிர் – இனிமை +  உயிர்

நல்லொழுக்கம் – நன்மை +  ஒழுக்கம்

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.