டிஎன்பிஎஸ்சி குரூப் 4: பிரித்தெழுதுக- பகுதி 4

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பொதுத் தமிழ் பிரிவில் பிரித்தெழுதுக சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். இப்பகுதியில் எப்படியான கேள்விகள் கேட்கப்படும் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

 

பிரித்தெழுதுக:

மெய்ஞ்ஞானம் – மெய்மை + ஞானம்

தொல்லுலகு – தொன்மை + உலகு

சீரிளமை – சீர் + இளமை

உலகாளும்      – உலகு +  ஆளும்

கடனறிந்து      – கடன்   +  அறிந்து

அல்குற்ற – அல் +  கு  + உற்ற

உய்யவோர் – உய்ய +  ஓர்

பெருவிழா – பெருமை +  விழா

அச்சாணி – அச்சு +  ஆணி

நீரமுது – நீர் + அமுது

நுந்தை – நும்   + தந்தை

பேருதவி – பெருமை  +  உதவி

கடுந்தண்டனை – கடுமை   +  தண்டனை

சொற்றொடர் – சொல்   +  தொடர்

அறிவாற்றல் – அறிவு +  ஆற்றல்

காலூன்றி – கால்   +  ஊன்றி

நாத்தொலைவில்லா – நா  + தொலைவு +  இல்லா

கடுஞ்சொல் – கடுமை  +  சொல்

பிறவறம் – பிற  +  அறம்

மாசில் – மாசு   +  இல்

புறச்சூழல் – புறம்    +  சூழல்

மருந்துண்ணும் – மருந்து    +  உண்ணும்

வலிவூட்ட – வலிவு     +  ஊட்ட

பழமொழி – பழமை  +  மொழி

நல்லுடல் – நன்மை  +  உடல்

என்னலம்       – என்  +  நலம்

புதுப்பானை – புது +  பானை

ஓரிடத்தில் – ஓர் +  இடத்தில்

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.