தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் 90 கிட்ஸ் முதல் 2 கே கிட்ஸ் வரையில் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றே கூறலாம்.
இந்நிலையில் கடந்த 2002-ஆம் ஆண்டு அவரது தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவான படம் பாபா. இப்படத்தினை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். அதே சமயம் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா நடித்திருந்தார்.
அதே போல் சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ், கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
தற்போது ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு பாபா திரைப்படம் புதுப்பொலிவுடன் ரீலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக வருகின்ற 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.