
தொழில்நுட்பம்
செம்ம வைரல்..! குலு குலு படத்தி ‘மாட்னா காலி’ பாடல் வெளியீடு…
மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் ரத்னகுமார் தற்போது சந்தானத்தின் நடிப்பில் உருவாகியுள்ள குலு குலு படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு விஜய் கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படம் வழக்கம்போல் சந்தானத்தின் காமெடி கலாட்டாவில் குலு குலு படம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் அதுல்யா சந்த்ரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், ‘லொள்ளு சபா’ மாறன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகின்ற ஜூலை 29-ஆம் தேதி வெளியாக போவதாக படக்குழு அறிவித்துள்ளது.
தற்போது ‘மாட்னா காலி.. மாட்டாத வரை ஜாலி’ என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக சந்தோஷ் நாராயணனின் ராக்ஸ் நடனமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
