
தமிழகம்
சென்னையில் ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!! ஊரடங்கு உத்தரவுக்கு வாய்ப்பு?
நம் தமிழகத்தில் கடந்த 48 மணி நேரத்தில் கொரோனாவின் பாதிப்பு வேக வேகமாக பரவிக்கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக நேற்றைய தினம் தமிழகத்தில் 2000க்கும் அதிகமான கொரோனா பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை உருவானதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினமும் கொரோனா பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 2000த்தை கடந்து பெரும் சோகத்தை உருவாக்கி உள்ளது. அதன்படி இன்றைய தினம் கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 2385 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் தலைநகர் சென்னையில் மட்டும் ஒரே நாளில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சென்னையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 909ல் இருந்து 1025 ஆக உயர்ந்துள்ளது.
இதனால் சென்னையில் மீண்டும் ஊரடங்கு போட அதிக வாய்ப்புள்ளதாகவும் காணப்படுகிறது. மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 369 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 121 பேருக்கும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 118 பேருக்கும் கொரோனாவின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
