சூர்யா எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை: யூடியூப் சேனலுக்கு பார்வதி பேட்டி

நடிகர் சூர்யா எங்களுக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை என பார்வதி அம்மாள் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் பார்வதி அம்மாள் மற்றும் அவரது கணவர் ராசா கண்ணு ஆகியோர்களின் உண்மை கதை என்பதும் இந்த கதையை படமாக்கிய சூர்யா கோடி கோடியாய் சம்பாதித்த போதிலும் பார்வதி அம்மாள் அவர்களுக்கு வெறும் பத்து லட்சம் மட்டுமே உதவி செய்ததாகவும் தகவல்கள் வெளியானது

இந்த நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள பார்வதி அம்மாள், சூர்யா இதுவரை எங்களுக்கு எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேலும் அவரது மருமகன் அளித்த பேட்டியில் சூர்யா இதுவரை எட்டி கூட பார்க்கவில்லை என்றும் மேலும் தாங்கள் குரவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்றும் இருளர் சமுதாயம் என படத்தில் காண்பித்து எங்களுக்கு வர வேண்டிய சலுகைகளை இருளர் சமுதாயத்திற்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்

ஏற்கனவே ஜெய் பீம் படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாமகவினர் கூறிவரும் நிலையில் தற்போது பார்வதி அம்மாள் குடும்பத்தினரே திடீரென சூர்யாவுக்கு எதிராக மாறியுள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print