சிட்டிசன் படம்.. தாமதமாக வந்த மேக்கப் ஆர்டிஸ்ட்.. அஜித் செய்த செயல்..!!

எஸ் எஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில் சரவண சுப்பையா இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சிட்டிசன். அஜித் நடித்த இந்த படத்தில் மீனா, வசுந்தரா தாஸ், நக்மா, மணிவண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தேவா இசையில் 8 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் தயாரானது. அஜித் படங்களில் இந்த படமும் வெற்றி படமாக 100 நாட்களைக் கடந்து தியேட்டரில் ஓடியது. இந்த படத்தின் கதைப்படி அஜித் பல கெட்டப்புகளில் மாறுவேடம் அணிந்து வருவார்.

இரண்டு பாடல்களில் ஒரே வரி.. அஜித், துல்கர் படத்தில் இருந்த கனெக்சன்.. வைரமுத்து செய்த மேஜிக்.. இதை நீங்க கவனிச்சு இருக்கீங்களா?

ஒவ்வொரு மாறு வேடத்தின் போதும் அவருக்கு வித்தியாசமாக மேக்கப் போடப்பட்டிருக்கும். அப்படி இந்த படத்தில் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் முக்கிய இடம் வகித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு போது ஒருநாள் மேக்கப் ஆர்டிஸ்ட் மிகவும் தாமதமாக வந்துள்ளார்.

சுமார் 3 மணி நேரம் அவருக்காக இயக்குனர் மற்றும் அஜித் என அனைவரும் காத்திருந்துள்ளனர். மூன்று மணி நேரம் கழித்து வந்த மேக்கப் ஆர்ட்டிஸ்டிடம் அஜித் மிகவும் கோபப்பட்டு உள்ளார். அப்போது அவர் தான் மூன்று பேருந்து ஏறி வந்ததால் தாமதம் ஆகிவிட்டதாக கூறியுள்ளார்.

நடிகர் ஷாருக்கான் பார்த்து தல அஜித் கற்றுக்கொண்ட அந்த ஒரு விஷயம்!

உடனே அஜித் மேக்கப் ஆர்ட்டிஸ்டிடம் எந்த ஊரை சேர்ந்தவர் என்று கேட்டபோது அவர் கூற தன்னுடன் இருக்கும் ஒருவர் இவ்வளவு தூரத்தில் இருந்து வருகிறார் என்பதை கூட தான் தெரிந்து கொள்ளாமல் போய்விட்டோமே என்று பைக் இல்லையா என கேட்டுள்ளார்.

அதற்கு அவர் இல்லை என்று கூற அஜித் அமைதியாக சென்று விட்டார். அன்றைய தினம் படப்பிடிப்பு முடிந்து கிளம்பும் சமயத்தில் அஜித் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டை அழைத்து அவரிடம் ஹோண்டா பைக் சாவியை கொடுத்துள்ளார்.

நடிகர் அஜித்தை மிரட்டிய திரைப்பட தயாரிப்பாளர்! அட இது எல்லாம் ஒரு காரணமா?

அதனை அந்த மேக்கப் ஆர்டிஸ்ட் அஜித்தின் காலில் விழுந்து வாங்கியுள்ளார். இதன் மூலம் தன்னுடன் இருப்பவர்களை அஜித் எந்த அளவிற்கு கவனித்துக் கொள்வார் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.