கர்நாடக தேர்தல்: ஓபிஎஸ் வேட்புமனு நிராகரிப்பு!

அதிமுக- வில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஓ பன்னீர்செல்வத்துக்கு மேலும் ஒரு பின்னடைவாக, வரவிருக்கும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் நிறுத்திய வேட்பாளர்களின் வேட்புமனுக்களை தேர்தல் ஆணையம் இன்று நிராகரித்தது.

வேட்புமனு படிவங்கள் சரியாக நிரப்பப்படாததால் வேட்புமனுக்கள் ஏற்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இபிஎஸ் நிறுத்திய வேட்பாளரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஓபிஎஸ் அவர்கள் புலிகேசிநகர், கோலார், காந்திநகர் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார்.

ஒரு நாள் முன்பு, புலிகேசிநகர் ஒதுக்கீட்டுத் தொகுதியின் வேட்பாளராக அன்பரசனை எதிர்க்கட்சியான அதிமுக அறிவித்தது.

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

இதற்கிடையில், தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக, பெங்களூருவில் உள்ள புலகேசிநகர் (எஸ்சி) தொகுதியில் முரளியை வேட்பாளராக நிறுத்தியது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.