கள்ளழகர் சித்திரை திருவிழா… மதுரை மாவட்டத்திற்கு மே 5ல் உள்ளூர் விடுமுறை!

கள்ளழகர் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மே ஐந்தாம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுந்தரராஜ பெருமாள் என்று சொல்லக்கூடிய கள்ளழகர் திருக்கோவிலுடைய சித்திரைத் திருவிழா வரும் 30ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வாக 4ஆம் தேதி மதுரை மூன்றுமாவடி பகுதியில் கள்ளழகர் எதிர்சேவையும் தொடர்ச்சியாக 5ஆம் தேதி அதிகாலை வரைக்கும் தல்லாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் எதிர்சேவை நடைபெறும்.

இதனைத் தொடர்ந்து 5ஆம் தேதி காலை 5:45 மணி முதல் 6.12 மணிக்குள்ளாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வானது நடைபெற உள்ளது.

இந்த நிலையில் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளகூடிய ஆழ்வார்புரம் பகுதியில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர் மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங், மற்றும் மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், சட்டமன்ற உறுப்பினர்கள் பூமிநாதன், தளபதி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர்

கடந்த ஆண்டு சித்திரை திருவிழா கூட்டநெரிசலில் சிக்கி இரு பக்தர்கள் உயிரிழந்த நிலையில் 8 பேர் படுகாயம் அடைந்தனர் இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் பக்தர்கள் வருகை, வாகன தடை ,தண்ணீர் திறப்பு, மேடை அமைப்பு, காவல்துறை பாதுகாப்பு உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டனர்

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர் வரும் 5ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்விற்காக உள்ளூர் விடுமுறை அளிப்பதாகவும் , பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விழாவிற்கு வருகை தருவதற்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் , மேலும் பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி சுவாமி தரிசனம் செய்வதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து செயல்படுத்தும் எனவும் தெரிவித்தார்
கடந்த ஆண்டு போல எந்தவித அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் முன்னேற்பாடு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்அ

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.