கமல்ஹாசனை எனக்கு அவ்ளோ பிடிக்கும்!.. விஜய்யின் ரீல் அம்மா சொன்ன விஷயத்தை கேட்டீங்களா?..

நடிப்பு, பாடல், இயக்கம் போன்ற அனைத்து திரைத்துறையின் அனைத்து தளங்களிலும் சிறந்த ஒரு மனிதர் என்றால் அது கமல்ஹாசன் தான். இரண்டு வருடத்திற்கு ஒரு படம் அல்லது மூன்று வருடத்தில் ஒரு படம் என்றாலும் அந்த படத்திற்காக நிறைய நேரம் செலவு செய்து தனது முழு உழைப்பை அந்த படத்தில் கொடுப்பார். அவ்வாறு கமல் நடித்து வெளிவந்த அவ்வை சண்முகி. இந்தியன், தசவதாரம் போன்ற படங்களில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

jayas

கலக்கும் கமல்ஹாசன்:

2022ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான விக்ரம் இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 மற்றும் 3 படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த் போன்றவர்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் பாடல் ஒன்று 30 கோடி செலவில் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகின. படத்தின் 2 மற்றும் 3ஆம் பாகங்களும் ஒரே ஆண்டில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதற்கிடையே இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் படத்திலும் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து கமல்ஹாசன் 237, கல்கி போன்ற படங்களில் கமிட்டாகியுள்ளார். சிவகாத்திகேயனின் அடுத்த படமாக அமரன் படத்தையும் கமலின் ராஜ்கமல் புரோடக்ஷன்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

ஜெயசுதா பேட்டி:

ஒரு பக்கம் படம் நடிப்பு, தயாரிப்பு மறுபக்கம் கட்சி வேலைகள் என கமலின் உழைப்பு பாராட்டிற்குரியது. அந்த வகையில் பிரபல நடிகை ஜெயசுதா தான் அளித்து பேட்டி ஒன்றில் கமலை பாராட்டியுள்ளார். அந்த காலத்தில் எவ்வளவு கியூட்டா ஒரு பையன் பாடுறான் நடிக்கிறான் என்று அனைவரும் ஆச்சரியப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

மற்ற நடிகர்களைவிடவும் தனித்துவமன நடிப்பை அவர் வெளிப்படுத்தியதாகவும் நடிகை ஜெயசுதா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். தோழா, வாரிசு போன்ற படங்களில் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்திருப்பார் நடிகை ஜெயசுதா. வாரிசு படத்தில் நடிகர் விஜய்க்கு அம்மாகவும் சரத்குமாருக்கு மனைவியாகவும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். நடிகர் கமலஹாசன் குறித்து ஜெயசுதா பேட்டியில் பேசியது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...