கனமழையின் எதிரொலி: புதுக்கோட்டையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் இன்று சென்னை உட்பட 11 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஏனென்றால் தமிழகத்தில் தொடர் கனமழையால் பல மாவட்டங்களுக்கு இந்த விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

பள்ளிகள் விடுமுறை

இந்த நிலையில் சென்னையில் பெய்த கன மழையால் அங்கு மழை நீரானது வீட்டுக்குள் புகுந்து உள்ளது. இதனால் அங்கு வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை, செங்கல்பட்டு உட்பட நான்கு மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு தினங்கள் விடுமுறை அறிவிக்கலாம் என்று கூறப்பட்டது.

இது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிக்க உள்ள நிலையில் தற்போது எதிர்பாராதவிதமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை தினம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு கருதி இத்தகைய விடுமுறை அளிக்கப்பட்டதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment