ஏன் ரேட்டு இதுதான்!.. ஓகேனா சொல்லுங்க!.. சம்பளத்தை ஏற்றிக் கொண்டே செல்லும் நயன்தாரா!..

கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துக்கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா கடந்த ஆண்டு ஜவான் படம் மூலம் பாலிவுட்டிலும் எண்ட்ரி கொடுத்து ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார். அதை தொடர்ந்து பாலிவுட் இயக்குநர்கள் பலரும் நயன்தாராவின் கால்ஷீட்டுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது நயன்தாரா தன் சம்பளத்தை மேலும், உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை நயன்தாரா:

நடிகை நயன்தாரா மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் முதல் முதலில் ஐயா படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து சந்திரமுகி, கஜினி, வல்லவன்,ஈ, பில்லா, ஆதவன், வில்லு, தனி ஒருவன் போன்ற பல படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார்.

நடிகர் சிம்புவை காதலித்து வந்த நயன்தாரா பின்பு சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்திருந்த நானும் ரௌடி தான் திரைப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக வெற்றிப்பெற்றது. இப்படத்தின் மூலம் விக்னேஷுடன் பழக தொடங்கிய நயன்தாரா அவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு திருமனம் செய்துக்கொண்டார். மேலும், வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயான நயன்தாரா தன் மகன்களுடன் பல போஸ்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகிறார்.

மேலும், தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்தெடுத்து நடித்துவரும் நயன்தாரா மாயா, டோரா, கொலையுதிற்காலம் போன்ற பல படங்களில் நடித்திருந்தார். ஆனால் அவர் எதிர்ப்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெறவில்லை. பெண்கள் உபயோகப்படுத்தும் பல பொருட்களை விற்பதன் மூலம் பிஸ்னஸிலும் இறங்கியுள்ளார் நயன்தாரா. படங்கள் தயாரிப்பது, நடிப்பது, குழந்தைகளை பார்ப்பது, பிஸ்னஸில் கவனம் செலுத்துவது போன்ற பல வேலைகளில் ஈடுப்பட்டு வருகிறார்.

சம்பளத்தை அதிகரித்த நயன்தாரா:

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்த நயந்தார கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில் போலிஸாக இந்தியிலும் அறிமுகமாகி அசத்தியிருந்தார். அப்படம் பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி வரை வசூலை அள்ளியது. அதை தொடர்ந்து தமிழில் டெஸ்ட், தனி ஒருவன்2, மண்ணாங்கட்டி போன்ற பல படங்கள் கமிட்டாகியுள்ளார். தொடர் தோல்விக்கு பிறகு ஜவான் படம் நயனுக்கு ஒரு கம்பேக்காக அமைந்தது.

தற்போது புதிதாக ட்ரம்ஸ்டிக் நிருவனம் தயாரிப்பில் இயக்குநர் செந்தில் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ள நயன்தாரா தன் சம்பளத் தொகையை 10 கோடியில் இருந்து 11 கோடியாக உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தான் நடிக்கவிருக்கும் படம் எந்த பட்ஜட்டாக இருந்தாலும் தன் சம்பளத்தை குறைப்பதாக இல்லை என உறுதியாக உள்ளார் என கூறப்படுகிறது.

கடந்த 20 ஆண்டுகளாக நயந்தாரா நடித்து வரும் நிலையில் இது வரை எந்த நடிகையாலும் அந்த இடத்தை பிடிக்க முடியவில்லை . முன்னணி நடிகை லிஸ்டில் திரிஷா இல்லனா நயந்தார என்பது போல் ஆகிவிட்டது. எனவே இருவரும் தன் சம்பளத்தொகையை உயர்த்திக்கொண்டே இருக்கின்றனர். படங்கள் ஓடவில்லை என்றாலும்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews