Connect with us

என்.ஐ.ஏ சோதனை!! உயர் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை..!!

amit shah19 1578214655 1634212042 1650161190

செய்திகள்

என்.ஐ.ஏ சோதனை!! உயர் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை..!!

டெல்லியில் தேசிய புலனாய்வு முகமையின் இயக்குனர் உள்ளிட்டோருடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

நாடுமுழுவதும் இன்றைய தினத்தில் பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டுதல், பயிற்சி அளித்தல் போன்ற போன்ற புகார்களின் பேரில் எஸ்டிபிஐ, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகளில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 10 மாநிலங்கள், 100 க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை கைது செய்யப்பட்டதையடுத்து, சோதனையில் கிடைத்த ஆதாரங்களில் அடிப்படையில் PFI-இன் நிலை குறித்த விசாரணை நடத்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

அதே போல் உதய்பூர் மற்றும் அமராவதியில் அப்பாவிகளின் தலை துண்டித்த கொலையாளிகளுடன் PFI-க்கு தலைவருக்கு தொடர்பு இருக்கலாம் என கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top