என்னால இனிமேல் காத்திருக்க முடியாது.. வீடியோ வெளியிட்ட நடிகை மாளவிகா மோகனன்

என்னால் இனி மேலும் காத்திருக்க முடியாது என நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார் .

விக்ரம் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் ’தங்கலான் ‘ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இதற்கு முன் அவர் விஜய்யின் ’மாஸ்டர்’ மற்றும் தனுஷின் ‘மாறன்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிலம்பம் சுற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் தற்போது தான் சிலம்பம் என்ற கலையின் குழந்தை பருவத்தை அடைந்து உள்ளேன் என்றும் இந்த கலையை எனக்கு கற்றுத் தந்த பயிற்சியாளருக்கு நன்றி என்றும் இந்த கலையினால் எனக்கு மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் என்றும் அந்த மாற்றத்தை காண என்னால் காத்திருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

நடிகை மாளவிகா மோகனன் ’தங்கலான் இதுதவிர இந்தியில் ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/Clyjp8pjuPr/

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.