எந்த சமுதாயத்தை அவமதிக்கும் நோக்கம் எனக்கில்லை!: நடிகர் சூர்யா;

ஜெய் பீம்

தனது நடிப்பால்  நடிப்பின் நாயகன் என்ற பெயரை பெற்று உள்ளார் நடிகர் சூர்யா. நடிகர் சூர்யா நடிப்பில் சில நாட்களாகவே அனைத்து படங்களும் ஓடிடியில் வெளியாகின்றன. குறிப்பாக சூரரைப்போற்று என்ற திரைப்படம் சூர்யா ஓடிடியில் வெளியிட்டிருந்தார். அந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

ஜெய்பீம்

தற்போது அவர் நடிப்பில் உருவான ஜெய்பீம் திரைப்படமும் ஓடிடியில் வெளியானது. இந்த திரைப்படம் சமூகநீதிக்கான திரைப்படமாக அமைந்துள்ளது. ஜெய்பீம் திரைப்படத்தில் இருளர் சமூகத்திற்கு நடக்கும் அநீதிகளை விலக்கும் கதையாக படம் நகரும்.

ஜெய்பீம் திரைப்படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வெளியான பின்னர் அனைவர் மத்தியிலும் மிகுந்த வரவேற்பு கிடைத்தது, பலரும் சூர்யா மற்றும் அவரது குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர்.

இருப்பினும் ஒருசில சர்ச்சையான காட்சிகள் இந்த படத்தில் இருந்தாலும் அவை பின்னர் நீக்கப்பட்டது. இதுகுறித்து தற்போது சூர்யா விளக்கம் அளித்துள்ளார். அதன்படி குறிப்பிட்ட தனி நபரையோ எந்த ஒரு சமுதாயத்தையும் அவமதிக்கும் நோக்கம் எனக்கோ, என்னுடைய படக்குழுவுக்கோ ஒருபோதும் இருந்ததில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

சமத்துவமும், சகோதரத்துவமும் பெருக நாம் அனைவரும் அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம் என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print