Connect with us

இலங்கைக்கு குட்பாய் சொல்லும் பிரதமர்; வெளிநாடு தப்பி செல்ல சதி திட்டம் !!

mahinda rajapakshe

News

இலங்கைக்கு குட்பாய் சொல்லும் பிரதமர்; வெளிநாடு தப்பி செல்ல சதி திட்டம் !!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக பெரும் பொருளாதார நெருக்கடி நிலவி வந்ததால் அந்நாட்டு மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத நிலையில் திண்டாடி வந்தனர். குறிப்பாக இலங்கையின் முக்கிய நகரமான கொழும்பில் நாளொன்றுக்கு 13 மணி நேரம் மின்வெட்டு தொடர்ந்தது..

மின்சாரத்தை நம்பி இருக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இந்நிலையில் இலங்கை பிரதமர் பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்ட நடத்தி வந்தனர்.

இந்த சூழலில் நேற்று இலங்கை அரசு ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியவர்களை தாக்கியதால் வன்முறை வெடித்தது. இதனால் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் பலர் இறந்ததாகவும், 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தை போராட்டம் நடத்தியவர்கள் மகிந்த ராஜபக்சே இல்லத்திற்கு தீ வைத்து எரித்ததால் மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், மகிந்த ராஜபக்சே சிகிச்சைக்காக மட்டுமே வெளிநாடு செல்வதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தாலும் உண்மை நிலவரம் என்பது விரைவில் தெரியவரும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top