இன்று ரிலீஸ் ஆகும் பொங்கல் படங்கள் ஒரு பார்வை

இன்று பொங்கலுக்கு பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை.அஜீத் நடிப்பில் நேற்றே வலிமை படம் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் அப்பட ரிலீசும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது இதனால் ரசிகர்கள் மிகுந்த சோகம் அடைந்துள்ளனர்.

இருப்பினும் பொங்கல் திருவிழாவை கொண்டாட இரு ஆறுதலான பெரிய படங்களே வந்துள்ளன.

சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ்.ஆர் பிரபாகர் இயக்கியுள்ள திரைப்படம்தான் கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படம்.

இந்த திரைப்படம் இன்று முதல் திரைக்கு வருகிறது. சுந்தரபாண்டியன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம். அந்த படத்துக்கு பிறகு எஸ்.ஆர் பிரபாகர் பல படங்கள் இயக்கி இருந்தாலும் எதுவும் பெரிய வெற்றியை பெறவில்லை.

அதனால் இந்த படம் அதே கூட்டணியில் இணைவதால் பெரிய வெற்றியை பெறும் என நம்பி பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்கின்றனர்.

காமெடி நடிகர் சதீஷ் நடித்துள்ள நாய் சேகர் படமும் இன்று ரிலிஸ் ஆகிறது. சதீஷ் முன்னணி நடிகர் இல்லையென்றாலும் முன்னணி காமெடி நடிகர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. கதைக்களமும் நாயோடு சுவாரஸ்யமாக பயணிப்பதாலும் விஜய் நடித்த பிகில் படத்துக்கு பிறகு ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள பெரிய படம் என்பதாலும் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பொங்கல் கொண்டாட்டத்தில் எந்த படம் வெற்றி பெறுகிறது என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment