Connect with us

இது பழைய கூட்டத்தின் தொடர்ச்சி அல்ல; சிறப்பு பொதுக்குழு கூட்டம்!!

admk meeting

தமிழகம்

இது பழைய கூட்டத்தின் தொடர்ச்சி அல்ல; சிறப்பு பொதுக்குழு கூட்டம்!!

கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னை வானரகத்தில் அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திலிருந்து திடீரென்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் இடையிலேயே வெளியேறினர்.

அதன் பின்பு கட்சியில் உட்கட்சி பூசல் அதிக அளவு நிகழ்ந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஜூலை 11ஆம் தேதி மீண்டும் மற்றும் ஒரு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்துள்ளது.

இந்த பொதுக்குழு கூட்டம் நடத்தக்கூடாது என்று, அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கு தொடுத்திருந்தது. இந்த பொதுக்குழு பற்றி உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி ஜூலை 11ஆம் தேதி நடைபெறுவது கடந்த பொதுக்குழுவின் தொடர்ச்சி அல்ல, சிறப்பு பொதுக்குழு என்று கூறியுள்ளது. ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் பொது குழுவுக்கு தடை விதிக்க கூடாது என்று இபிஎஸ் தரப்பு வாதிட்டது.

இந்த வழக்கு நாளைய தினம் மதியம் 2:15 மணிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top