இசையமைப்பாளர் ஆவதற்கு முன்பே.. மாமியாருக்கு தேவா கொடுத்த வாக்கு.. கடைசில செஞ்சாரா இல்லையா..

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் சில ரியாலிட்டி ஷோர்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு வராத வகையில் இருக்கும். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளில் மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருவது தான் குக் வித் கோமாளி. இதன் முதல் சீசன் மிக பெரிய அளவில் பிரபலமான நிலையில் அதன் வெற்றி காரணமாக அடுத்தடுத்து சீசன்களையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

அந்த வகையில் கொரோனா சமயத்தில் ஒளிபரப்பான சில முக்கியமான சீசன்கள், பலரின் மன அழுத்தத்தை குறைப்பதற்கும் காரணமாக இருந்ததுடன் மட்டுமில்லாமல் ஏராளமான திறமை வாய்ந்த நபர்களை பிரபலம் அடையவும் செய்திருந்தது. ஒரு பக்கம் குக்காக சினிமா பரபலங்களான அஸ்வின், வனிதா, ரேகா, ரம்யா பாண்டியன், மைம் கோபி என ஏராளமானோர் கலந்துகொண்டு வருவதால் இந்த சீசனும் பெரிய அளவில் வெற்றி பெற்று வருகிறது.

அத்துடன் இவர்களுடன் சேர்ந்து சமைக்கும் கோமாளிகளும் பல காமெடி பிரபலங்களாக இருக்கும் நிலையில் அவர்கள் பெரிய இடத்தை அடைவதற்கு இந்த நிகழ்ச்சியும் முக்கிய பங்காற்றி வருகிறது. அப்படி ஒரு சூழலில் தான் முதல் நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து தற்போது ஆரம்பமான ஐந்தாவது சீசனும் முந்தைய சீசன்களை போல ஹிட்டடித்து வருகிறது.

முதல் நான்கு சீசன்கள் நடுவர்களாக இருந்த வெங்கடேஷ் பட், இந்த சீசனில் இருந்து விலக அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக செயலாற்றி வருகிறார். சில புது கோமாளிகளும் இந்த சீசனில் களமிறங்கியுள்ள நிலையில் ஸ்ரீகாந்த் தேவா, விடிவி கணேஷ், சுஜிதா, பிரியங்கா என பல பிரபலங்களும் போட்டியாளர்களாக ஒவ்வொரு வாரமும் ஏராளமான புதுப்புது வெரைட்டியான டிஷ்களையும் சமைத்து வருகின்றனர்.

இதனிடையே இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா தனது தந்தையும் இசையமைப்பாளருமான தேவா குறித்து தெரிவித்த கருத்து ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த போட்டியில் வரும் நாட்டுப்புற உணவு வகைகள் தொடர்பாக சமைக்க வேண்டும் என இருந்தது. அப்போது ஸ்ரீகாந்த் தேவா, சர்க்கரை மல்லூர் பணியாரம் என்ற ஒன்றை தயார் செய்திருந்தார்.

அப்போது இந்த இனிப்பு பற்றி அவர் பேசுகையில், “எனது தந்தை தேவா அவரது திருமணம் முடிந்த சமயத்தில் எனது பாட்டி அதாவது, அவரது மாமியாரின் வீட்டிற்கு விருந்திற்கு போயிருந்தார். அந்த சமயத்தில் அவர் சர்க்கரை மல்லூர் பணியாரத்தை எனது தந்தைக்கு செய்து கொடுத்திருந்தார். அப்போது, ‘ஒரு நாள் நான் இசையமைப்பாளராக வருங்காலத்தில் வருவேன். அப்போது உங்களுக்கு வளையல் செய்து போடுவேன்’ என்றும் தந்தை தேவா கூறியிருந்தார்.

நிஜத்திலும் பெரிய இசை அமைப்பாளராக மாறி எனது பாட்டிக்கு அவர் சொன்னதை போல வளையலை செய்து கொடுத்திருந்தார்” என சக்கரை மல்லூர் பணியாரத்திற்கு பின்னால் இருந்த நெகிழ்ச்சியான கதையை இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews