Connect with us

ஆட்டோ டிரைவருடன் இரவு உணவு.. அசத்தும் முதல்வர் கெஜ்ரிவால்!!

அரவிந்த்

செய்திகள்

ஆட்டோ டிரைவருடன் இரவு உணவு.. அசத்தும் முதல்வர் கெஜ்ரிவால்!!

குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைப்பெற இருப்பதால் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினரிடையே கடும் மோதல்கள் நிலவி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆட்சியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஒருவர் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை தனது வீட்டிற்கு வந்து இரவு உணவு சாப்பிடுமாறு கேட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநரின் அழைப்பினை ஏற்ற முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆட்டோ ஓட்டுநருடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சாப்பிட்டார். இத்தகைய செயலாம்ல் அவர்களது குடும்பத்தினர் திக்குமுக்காடிப்போய் இருந்தனர்.

இதனிடையே முன்னதாக ஆட்டோவில் செல்ல அரவிந்த் கெஜ்ரிவால் முயன்றபோது பாதுகாப்பு காரணமாக போலீசார் தடுத்தனர். இதனால் அகமதாபாத்தில் காவல்துறை அதிகாரிகளிடம் கோபத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top