அலர்ட்! 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில்.. வானிலை அப்டேட்!!

கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தை பொறுத்தவரையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன் படி, விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கனமழை! எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா?

இதனை தொடர்ந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment