Connect with us

அடேங்கப்பா..! என்ன நடிப்புடா சாமி.. அன்று நீங்கப்பட்டவர் இன்று பங்கேற்பு..

1837463c3c79e65c9c149a7c34f824c4 original

Tamil Nadu

அடேங்கப்பா..! என்ன நடிப்புடா சாமி.. அன்று நீங்கப்பட்டவர் இன்று பங்கேற்பு..

சசிகலாவை சந்தித்ததால் அதிமுகாமில் இருந்து நீக்கப்பட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ. ராஜா அதிமுக விழாவில் பங்கேற்றதால் அவரை கட்சியை விட்டு நீக்கியது வெறும் கண்துடைப்பு என்று அதிமுகவினர் இடையே சலசலப்பு ஏற்பட்டது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சசிகலாவை சந்தித்ததாக கூறி அதிமுகவின் ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ. ராஜா உட்பட பலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்த ஓ. ராஜா ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே பல்வேறு எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்தார்.

பின்னர் சசிகலாவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் சசிகலா பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஏற்பாடுகளை முன் நின்று ஓ.ராஜா செய்துவந்தார். அதிமுகவினர் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கட்சி தலைமை அறிவித்திருந்தது.

இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அதிமுக எம்.பியும் பன்னீர் செல்வத்தின் மகன் பங்கேற்ற விழாவில் ஓ. ராஜா பங்கேற்றார். மேலும் அவர் மேடைக்கு கீழே இருந்து விழாவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.

இதைப் பார்த்த அதிமுகவினர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ. ராஜா எவ்வாறு கட்சியில் கலந்து கொள்கிறார் என்று ஆச்சரியப்பட்டனர். மேலும், ஓ. ராஜாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அல்லது கட்சியின் தலைமை கூறியதற்கு கட்டுப்படுவதாக குழப்பத்தில் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top