அசோக்செல்வனுக்கு டும் டும் டும்! மாஸான ஜோடி பொருத்தம்!

நடிகர் அசோக்செல்வன்,நடிகை கீர்த்தி பாண்டியன் திருமணம் இன்று சற்று முன் நடந்து முடிந்துள்ளது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் லீடிங் ஹீரோக்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் சூது கவ்வும் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து பீட்சா II தெகிடி, ஆரஞ்சு மிட்டாய், கூட்டத்தில் ஒருத்தன், முப்பரிமாணம் என பல படங்களில் நடித்துள்ளார்.

அதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் படத்தின் மூலம் பிரபலமடைந்தார். சமீபத்தில் அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் வெளியான போர் தொழில் படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்துள்ளது.

நடிகர் அருண்பாண்டியனுடைய மகளும் நடிகையான கீர்த்தி பாண்டியனும் அசோக் செல்வன் கடந்து சில வருடங்களாக காதலி வந்துள்ளனர். நடிகை கீர்த்தி பாண்டியன் தும்பா, அன்பிற்குரிய படங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் கீர்த்தி பாண்டியனும் அசோக் செல்வன் இணைந்து ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்துள்ளனர். அந்த நேரத்தில் தான் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இவர்களின் காதலுக்கு இரண்டு வீட்டு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதில் நெருக்கமான சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலை இவர்களின் திருமணம் செப்டம்பர் 13ஆம் தேதி அதாவது இன்று கொஞ்ச நேரத்திற்கு முன்பு திருநெல்வேலி, பாளையங்கோட்டைக்கு அருகில் உள்ள இட்டேரியில் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமண விழாவில் நடிகர் ரம்யா பாண்டியனும் கலந்து விட்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை எல்லாம் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்துள்ளார் ரம்யா பாண்டியன். குடும்பத்துடன் அவர் திருமண விழாவில் எடுத்து கொண்டுள்ள போட்டோகள் தற்பொழுது வைரலாகி வருகிறது.

ஏ. ஆர் ரகுமானிற்கு ஆதரவாக இறங்கிய கார்த்தி! கோபத்தின் உச்சியில் இருக்கும் ரசிகர்கள்!

நடிகர் அருண்பாண்டியனுடைய மருமகள் தான் ரம்யா பாண்டியன் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். ஹாப்பி மேரேஜ் லைப் மை டியர் கண்மணி கீர்த்தி பாண்டியன் அண்ட் வெல்கம் டு அவர் பேமிலி டியரஸ்ட் மாப்பிள்ளை அசோக் செல்வன் அப்படின்னு ரம்யா பாண்டியன் மணமக்களை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த திருமண விழாவில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ள நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் சில நாட்களுக்கு பின் நடத்தப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த புது மண தம்பதிக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...