இந்திய வீரர்களுக்கு ஆலோசகராக பாகிஸ்தான் வீரர்!!

தென்னாப்ரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான ஆட்டம் தற்போது நடைபெற்று முடிந்தது. இந்த ஆட்டத்தில் 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்திய அணியின் வீரர்கள் தரவரிசைப்பட்டியலில் முன்னேறி உள்ளனர், முதல் டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா பல நெருக்கடிகளுக்கு இடையே இரண்டு இன்னிங்க்சிலும் சதம் அடித்தார். மயங்க் அகர்வாலும் இரட்டை சதத்தினை அடித்து அசத்தினார். ஜடேஜா, ஷமி, ஆகியோருக்கும் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்
 
இந்திய வீரர்களுக்கு ஆலோசகராக பாகிஸ்தான் வீரர்!!

தென்னாப்ரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான ஆட்டம் தற்போது நடைபெற்று முடிந்தது. இந்த ஆட்டத்தில் 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

இந்திய அணியின் வீரர்கள் தரவரிசைப்பட்டியலில் முன்னேறி உள்ளனர்,  முதல் டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா பல நெருக்கடிகளுக்கு இடையே இரண்டு இன்னிங்க்சிலும் சதம் அடித்தார்.

இந்திய வீரர்களுக்கு ஆலோசகராக பாகிஸ்தான் வீரர்!!

மயங்க் அகர்வாலும் இரட்டை சதத்தினை அடித்து அசத்தினார். ஜடேஜா, ஷமி, ஆகியோருக்கும் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், விராட் கோலியை பந்து வீச்சாளர்களின்  கேப்டன்  என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

அவர் கூறியதாவது, “விராட் கோலி பல சாதனைகளைப் புரிந்துவருகிறார், அவர் தற்போது இந்திய அணியின் கேப்டன் என்பதையும் தாண்டி பந்து வீச்சாளர்களின் கேப்டனாக உள்ளார்.

பலமுறை கேப்டன் என்பதை மறந்து, பந்து வீச்சாளர்களின் சிறப்பான ஆட்டத்தினைக் கண்டு ரசிக்கிறார். இதுபோன்ற ஒரு கேப்டனால்தான் அணிக்கு பக்க பலமாக இருக்க முடியும், அணியின் வெற்றிக்கு வழிவகுக்க முடியும்” என்றும் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது, “ பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீச்சு குறித்த ஆலோசனைகளை என்னிடம் கேட்கவில்லை என்றாலும், ஷமி போன்ற விளையாட்டு வீரர்கள் ஆலோசனைகள் கேட்டு வருகின்றனர்” என்று மனம் நெகிழ்ந்து பேசினார்.

From around the web