பதிலடி கொடுத்தாச்சு… தொடரைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் இந்தியா!!

வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டி 20 மற்றும் ஒருநாள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய 3 வது டி20 கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்றது, இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி இந்தியாவை பேட்டிங்க் செய்ய பணித்தது, அந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் துவக்க வீர்களாக களமிறங்கினர். தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில்,
 
பதிலடி கொடுத்தாச்சு… தொடரைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் இந்தியா!!

வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டி 20 மற்றும் ஒருநாள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய 3 வது டி20 கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்றது, இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி இந்தியாவை பேட்டிங்க் செய்ய பணித்தது, அந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் துவக்க வீர்களாக களமிறங்கினர்.

தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில், இந்திய அணியின் துவக்க வீரர்கள் அதிரடியாக ஆடினர்.

பதிலடி கொடுத்தாச்சு… தொடரைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் இந்தியா!!

ரோகித் சர்மா சிக்சர்களை விளாசி ரன் வேட்டை நடத்தினார், அதிரடியாக ஆடிவந்த அவர் 71 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆனார். ரிஷப் பந்த் டக் அவுட்டாகிப் போய் மீண்டும் விமர்சனங்களுக்கு ஆளாகினார்.

கே.எல்.ராகுல் வெற்றியினை நோக்கி நிதானமாக ஆடிவந்தார், அப்போது 91 ரன் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 240 ரன்களை எடுத்தது. விராட் கோலி 70 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

அடுத்து, 241 ரன்களை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்த்து, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் போராடினர்.

இருப்பினும் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு மடங்காமல் ஹெட்மையர் – பொல்லார்டு ஜோடி அதிரடியாக ஆடிவந்தது, ஹெட்மையர் 41 ரன்னில் ஆட்டமிழந்தார்.

சிக்சர்களை விளாசி வந்த பொல்லார்டு, 68 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆகினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது. இதனால் 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இதன் மூலம் டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது இந்தியா.

From around the web