மளமளவென சரிந்த முக்கிய விக்கெட்டுகள்… அலேக்காக வெற்றியை சாப்பிட்ட வெஸ்ட் இண்டீஸ்!!

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் பங்கேற்று வருகிறது, இந்தப் போட்டியின் முதல் தொடர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே முதல் வாய்ப்பினைப் பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்றதுடன், பந்துவீச்சினைத் தேர்வு செய்தது. அதன்படி இந்தியா பேட்டிங்க் செய்ய பணிக்கப்பட்டது, ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் துவக்க வீரர்களாக
 
மளமளவென சரிந்த முக்கிய விக்கெட்டுகள்… அலேக்காக வெற்றியை சாப்பிட்ட வெஸ்ட் இண்டீஸ்!!

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் பங்கேற்று வருகிறது, இந்தப் போட்டியின் முதல் தொடர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.

இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே முதல் வாய்ப்பினைப் பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்றதுடன், பந்துவீச்சினைத் தேர்வு செய்தது. அதன்படி இந்தியா பேட்டிங்க் செய்ய பணிக்கப்பட்டது, ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் துவக்க வீரர்களாக களம் இறங்கினர்.

மளமளவென சரிந்த முக்கிய விக்கெட்டுகள்… அலேக்காக வெற்றியை சாப்பிட்ட வெஸ்ட் இண்டீஸ்!!

வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் அணிக்கு பக்க பலமாக இருந்தார், அதாவது லோகேஷ் ராகுலை 6 ரன்னில் அவுட் ஆக்கினார்.

 அடுத்து கோலியை 4 ரன்னில் போல்டு ஆக்கியும் ரோகித் சர்மாவை 36 ரன்களில் அவுட் ஆக்கவும் செய்தார்.

அடுத்து ஸ்ரேயாஸ் அய்யர்-  ரிஷப் பண்டு ஜோடி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க போராடியது.

ஸ்ரேயாஸ் அய்யர் 70 ரன்களிலும், ரிஷப் பண்ட் 71 ரன்களிலும் அவுட் ஆக இந்திய அணி மீண்டும் நெருக்கடிக்கு உள்ளானது. அடுத்து கேதர் ஜாதவ் 40 ரன்களில் அவுட் ஆனார், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது.

288 ரன்கள் என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. சுனில் அம்ப்ரிஸ் 9 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

அடுத்து ஹெட்மயர்- ஷாய் ஹோப் ஜோடி, பெரிய அளவில் டஃப் கொடுத்தது. ஹெட்மயர் தனது சதத்தை நிறைவு செய்து, 139 ரன்களில் அவுட் ஆனார்.

அடுத்து நிகோலஸ் பூரன் களமிறங்கி ஆடிவந்தார், வெஸ்ட் இண்டீஸ் அணி 47.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஷாய் ஹோப் 102 ரன்களுடனும், பூரன் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

From around the web