பிரபல இங்கிலாந்து பந்துவீச்சாளருக்கு அபராதம்: ஐசிசி அதிரடி

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது ஐசிசியின் ஒழுங்கு விதிமுறைகளை மீறியதற்காக இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடிற்கு போட்டிக் கட்டணத்தில் 15% அபராதம் விதித்தது ஐசிசி! இந்த கொரோனா வைரஸ் காலத்திலும் இங்கிலாந்து நாட்டில் மட்டும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே முதலில் மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் டெஸ்ட் தொடர் போட்டியிலும், அதன்பின்னர் அயர்லாந்து நாட்டு அணியுடன் ஒரு டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து நாட்டின் கிரிக்கெட் அணி
 

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது ஐசிசியின் ஒழுங்கு விதிமுறைகளை மீறியதற்காக இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடிற்கு போட்டிக் கட்டணத்தில் 15% அபராதம் விதித்தது ஐசிசி!

இந்த கொரோனா வைரஸ் காலத்திலும் இங்கிலாந்து நாட்டில் மட்டும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே

முதலில் மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் டெஸ்ட் தொடர் போட்டியிலும், அதன்பின்னர் அயர்லாந்து நாட்டு அணியுடன் ஒரு டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து நாட்டின் கிரிக்கெட் அணி தற்போது பாகிஸ்தான் நாட்டு அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது

சமீபத்தில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்த சில நாட்களில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இருநாடுகளின் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின்போது ஐசிசியின் ஒழுங்கு விதிமுறைகளை மீறியதாக இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் குற்றம் சாட்டப்பட்டார்

இதுகுறித்து விசாரணை நடந்த நிலையில் ஐசிசி விதிகளை ஸ்டூவர்ட் பிராட் மீறியது உறுதி செய்யப்பட்டது. இதனால் போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதித்து ஐசிஐசி அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web