சிஎஸ்கே அணியில் 8 தமிழக பந்துவீச்சாளர்கள்: ஆச்சரிய தகவல்

இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி கொரோனா வைரஸ் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக தள்ளிப் போய் தற்போது செப்டம்பர் 19-ஆம் தேதி ஆரம்பிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் நவம்பர் 10ஆம் தேதி ஐபிஎல் போட்டியின் இறுதிப் போட்டிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர் என்பதையும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி சென்னை சூப்பர்
 

இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி கொரோனா வைரஸ் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக தள்ளிப் போய் தற்போது செப்டம்பர் 19-ஆம் தேதி ஆரம்பிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் நவம்பர் 10ஆம் தேதி ஐபிஎல் போட்டியின் இறுதிப் போட்டிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர் என்பதையும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் துபாய் செல்ல போவதாகவும் வெளிவந்த செய்தியைப் பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 8 பந்துவீச்சாளர்களில் இடம்பெற இருப்பதாகவும், அவர்கள் அனைவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆகஸ்ட் 16 ஆம் தேதி சென்னையில் தொடங்கும் பயிற்சியில் இந்த எட்டு பந்து வீச்சாளர்களும் தோனிக்கு பந்து வீசசுவார்கள் என்றும் இவர்களில் சிறப்பாக பந்து வீசுபவர்களை தோனி அணிக்கு சுழற்சி முறையில் தேர்வு செய்வார் என்றும் கூறப்படுகிறது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை எப்படியும் கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருப்பது இதிலிருந்து தெரிய வருகிறது

From around the web