பழிச்சொல்லையும் ஏற்பவன் – தேவாரப்பாடலும், விளக்கமும் 19

பாடல் வண்ட லங்கழ னிம்மடை வாளைகள் பாய்புனற்புண்ட ரீகம லர்ந்தும துத்தரு பூந்தராய்த்தொண்டர் வந்தடி போற்றிசெய் தொல்கழ லீர்சொலீர்குண்டர் சாக்கியர் கூறிய தாங்குறி யின்மையே . விளக்கம்… வளம்மிக்க வண்டல் மண்ணை உடைய வயல்களின் மடைகளில் வாளை மீன்கள் பாயும் நீர் நிலைகளில் தாமரைமலர்கள் மலர்ந்து தேனைத் தரும் பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், தொண்டர்கள் வந்து வணங்கும் கழல் அணிந்த பழமையான திருவடிகளை உடைய இறைவரே! சமணர்களும் சாக்கியர்களும் உம்மைக் கூறும் பொருளற்ற பழி மொழிகட்குக் காரணம்
 
🔥 Om Namah Shivaya 🔥

பாடல்

வண்ட லங்கழ னிம்மடை வாளைகள் பாய்புனற்
புண்ட ரீகம லர்ந்தும துத்தரு பூந்தராய்த்
தொண்டர் வந்தடி போற்றிசெய் தொல்கழ லீர்சொலீர்
குண்டர் சாக்கியர் கூறிய தாங்குறி யின்மையே .

விளக்கம்

வளம்மிக்க வண்டல் மண்ணை உடைய வயல்களின் மடைகளில் வாளை மீன்கள் பாயும் நீர் நிலைகளில் தாமரைமலர்கள் மலர்ந்து தேனைத் தரும் பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், தொண்டர்கள் வந்து வணங்கும் கழல் அணிந்த பழமையான திருவடிகளை உடைய இறைவரே! சமணர்களும் சாக்கியர்களும் உம்மைக் கூறும் பொருளற்ற பழி மொழிகட்குக் காரணம் யாதோ? சொல்வீராக.
From around the web