மைசூர் அரண்மனை போலவே இராமநாதபுரம் சேதுபதி அரண்மனையில் நடக்கும் நவராத்திரி தசரா

இராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்கள் பற்றி அனைவருக்கும் தெரியும். சுதந்திரத்துக்காகவும், ஆன்மிகம் செழிக்கவும் சேதுபதி மன்னர்கள் பெரும் பங்காற்றினார்கள். கட்டபொம்மன் வசனம் பேசியதாக சொல்லப்படும் அந்த ஜாக்சன் துரையை சந்தித்த நிகழ்வு சேதுபதி அரண்மனை என அழைக்கப்படும் இராமலிங்க விலாசத்தில் நடைபெற்றது வரலாற்று நிகழ்வு. அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள “இராசராஜேஸ்வரி அம்மன்” ஆலயம் அமைந்துள்ளது இக்கோவில் சேதுபதி மன்னர்களின் பரம்பரையினரால் நிர்வகிக்கப்பட்டு, ஆண்டுதோறும் “நவராத்திரி விழா” வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மைசூரில் “தசரா” பண்டிகை நடக்கும்போது
 

இராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்கள் பற்றி அனைவருக்கும் தெரியும். சுதந்திரத்துக்காகவும், ஆன்மிகம் செழிக்கவும் சேதுபதி மன்னர்கள் பெரும் பங்காற்றினார்கள். கட்டபொம்மன் வசனம் பேசியதாக சொல்லப்படும் அந்த ஜாக்சன் துரையை சந்தித்த நிகழ்வு சேதுபதி அரண்மனை என அழைக்கப்படும் இராமலிங்க விலாசத்தில் நடைபெற்றது வரலாற்று நிகழ்வு.

மைசூர் அரண்மனை போலவே இராமநாதபுரம் சேதுபதி அரண்மனையில் நடக்கும் நவராத்திரி தசரா

அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள “இராசராஜேஸ்வரி அம்மன்” ஆலயம் அமைந்துள்ளது இக்கோவில் சேதுபதி மன்னர்களின் பரம்பரையினரால் நிர்வகிக்கப்பட்டு, ஆண்டுதோறும் “நவராத்திரி விழா” வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மைசூரில் “தசரா” பண்டிகை நடக்கும்போது இங்கு நவராத்திரி விழாவும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நவராத்திரி விழாவின்போது தினசரி மாலை வேளையில் கலைநிகழ்ச்சிகள் அரண்மனை வாயிலில் நடைபெறும். இந்நிகழ்ச்சிகளுக்கு இராமநாதபுரத்து மக்களிடையே இன்றும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

மைசூர் அரண்மனை போலவே இராமநாதபுரம் சேதுபதி அரண்மனையில் நடக்கும் நவராத்திரி தசரா

இராசராசேசுவரி அம்மன் சிலை மிக குட்டியான சிலை மைசூர் மன்னர் சேதுபதி மன்னருக்கு அன்பளிப்பாக கொடுத்தது என கூறப்படுகிறது. மைசூரில் நடப்பது போலவே இங்கும் தசரா நடத்த வேண்டும் என மைசூர் மன்னர் கேட்டுக்கொண்டதற்கிணங்க நவராத்திரி 9 நாட்களும் அரண்மனைக்குள் அமைந்துள்ள இராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரங்கள் நடக்கிறது.

9 நாட்களும் பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் என சேதுபதி மன்னரின் அரண்மனையான இராமலிங்க விலாசமே களை கட்டும்.

பத்தாவது நாள் ஊரில் இருக்கும் அம்மன் எல்லாம் தேரில் பவனி வந்து இராம நாதபுரம் அரண்மனைக்கு வந்தடையும் இங்கிருக்கும் ராஜேஸ்வரி அம்மனும் அந்த தேர் ஊர்வலத்தில் இணைந்து சென்று மகர் நோன்பு பொட்டல் என சொல்லக்கூடிய இடத்தில் வில் எய்து அசுரனை அழிப்பர்.

From around the web