தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல் முடியேன்இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தீ கொடியேன்பல பொய்யேஉரைப் பேனைக்குறிக் கொள்நீ செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அடிகேள்உனக் காளாய்இனி அல்லேன்என லாமே விளக்கம்.. இடபத்தை ஊர்பவனே, ஒளி நிறைந்த பெண்ணை யாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! அப்பொருந்தாமையை அகற்றி என்னை நீ தெளிவித் தருளினமையால், இனி நான் இறக்கவும், மீளப் பிறக்கவும், இவ்வுலகில்
 
தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல்

முடியேன்இனிப் பிறவேன்பெறின் 
மூவேன்பெற்றம் ஊர்தீ
கொடியேன்பல பொய்யேஉரைப் 
பேனைக்குறிக் கொள்நீ
செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் 
நல்லூரருட் டுறையுள்
அடிகேள்உனக் காளாய்இனி 
அல்லேன்என லாமே

விளக்கம்..

இடபத்தை ஊர்பவனே, ஒளி நிறைந்த பெண்ணை யாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! அப்பொருந்தாமையை அகற்றி என்னை நீ தெளிவித் தருளினமையால், இனி நான் இறக்கவும், மீளப் பிறக்கவும், இவ்வுலகில் வாழப் பெறின் மூப் படைந்து வருந்தவும் ஆற்றேனாகின்றேன். நெறிகோடினேனாகிப் பொய்ம்மைகள் பலவற்றையே பேசுவேனாகிய என்னை நீ வெறாது ஏற்றருள்.


.

From around the web