தர்பூசணி வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

எல்லாவற்றிலும் ஆண், பெண் உண்டு. அது தர்பூசணியிலும் விதிவிலக்கல்ல!! தர்பூசணியில் நீளமான மற்றும் உருண்டை வடிவ தர்பூசணியை பார்த்திருப்போம். நீளவாக்கில் இருப்பது ஆண் தர்பூசணி. வட்டமாக உருண்டை வடிவில் இருப்பது பெண் தர்பூசணி. நாம் பொதுவாக தேர்ந்தெடுக்கும் நீள பழங்கள் சற்று சுவை குறைவாக இருக்கும். உருண்டை வடிவில் இருக்கும் பெண் பழம்தான் சுவை மிகுந்ததாய் இருக்கும். நீளவாக்கில் உள்ளதைவிட உருண்டை பழங்களில் விதைகளும் சதைப்பற்றும் அதிகமாக இருக்கும். நல்ல சிவப்பு நிறமாகவும் இருக்கும். அதனால் அதையே
 
தர்பூசணி வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

எல்லாவற்றிலும் ஆண், பெண் உண்டு. அது தர்பூசணியிலும் விதிவிலக்கல்ல!!
தர்பூசணியில் நீளமான மற்றும் உருண்டை வடிவ தர்பூசணியை பார்த்திருப்போம். நீளவாக்கில் இருப்பது ஆண் தர்பூசணி. வட்டமாக உருண்டை வடிவில் இருப்பது பெண் தர்பூசணி. நாம் பொதுவாக தேர்ந்தெடுக்கும் நீள பழங்கள் சற்று சுவை குறைவாக இருக்கும். உருண்டை வடிவில் இருக்கும் பெண் பழம்தான் சுவை மிகுந்ததாய் இருக்கும். நீளவாக்கில் உள்ளதைவிட உருண்டை பழங்களில் விதைகளும் சதைப்பற்றும் அதிகமாக இருக்கும். நல்ல சிவப்பு நிறமாகவும் இருக்கும். அதனால் அதையே தேர்ந்தெடுங்கள். நீளவாக்கில் உள்ள பழத்தில் தண்ணீர் அதிகமாக இருக்கும்.

தர்பூசணி வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

நீளவாக்கில் உள்ள பழத்தில் தோல் பகுதி நல்ல தடிமனாக இருக்கும். பழத்தின் அளவு குறைவாக இருக்கும். ஆனால் உருண்டையான பழங்களில் தோல் தடிமன் சற்று குறைவாகத்தான் இருக்கும். எது நன்றாகப் பழுத்தது என்று கண்டுபிடிக்கத் தெரியாமல் காயை வாங்கி வந்துவிட்டு, வீட்டில் நன்றாக திட்டு வாங்குவோம். ஆனால் காம்புப்பகுதியைப் பார்த்தே நன்கு பழுத்த பழத்தைக் கண்டுபிடித்துவிடலாம். நன்கு புதிதாக பச்சையாக உள்ள காம்பு கொண்ட பழங்களை வாங்குவதைவிட, பழம் பச்சையாகவும் காம்பு மட்டும் நன்கு காய்ந்து போய் இருக்கும் பழமாகத் தேர்வு செய்யுங்கள். அதுதான் நன்றாகப் பழுத்த பழம். அதேப்போல, சிறிய பழத்தில் சுவை இருக்காது என்று தூக்க முடியாத அளவுக்கு பெரிய பழமாகப் பார்த்து வாங்குவோம். ஆனால் உண்மையிலேயே பெரிய சைஸ் பழங்களைவிட சிறிய சைஸ் பழங்கள்தான் சுவை அதிகமாக இருக்கும்.

தர்பூசணி வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

அடுத்து நாம் செய்யும் தவறு, தர்பூசணியில் வெண்மை நிற திட்டு இருந்தால் அதை ஒதுக்கிவிட்டு, முழுக்க பச்சை நிறமாய் இருப்பதாய் பார்த்து வாங்கி வருவோம். ஆனால், வெண்மை நிறம் அல்லது மஞ்சள் நிற திட்டுக்கள் இருந்தால், வெளிர் மஞ்சள் மற்றும் வெண்மை நிறம் உள்ளவை ஓரளவுக்குதான் பழுத்திருக்கும். அடர் மஞ்சள் மற்றும் பிரௌன் நிறத்தில் உள்ளவைதான் நன்கு பழுத்திருக்கும். அதுமட்டுமில்லாம, நாள்கணக்கில் வெயில் படாமலும், தரையில் அழுந்தி இருப்பதாலும் ஏற்பட்ட நிறம். அது செடியிலேயே பழுத்த பழம், முழுக்க பச்சை நிறமாய் இருந்தால், அது மருந்தினால் பழுக்க வைத்த பழம் என வேறுபாடு அறியலாம்.

தர்பூசணியை சாப்பிடுவதால் சிறுநீரகக் கற்களை கரைக்கும். கல்லீரலை சுத்தப்படுத்தும். பித்தத்தைப் போக்கும், சிறுநீர் எரிச்லை போக்கும், நாக்கு வறட்சியை உடனே போக்கும், இயற்கையான குளுக்கோஸ் இதில் அதிகம். இதயத்தை பலப்படுத்தும். எலும்பு மற்றும் மூட்டுவலியிலிருந்து நிவாரணம் உண்டாகும். சருமப் பொலிவுக்கும் தலைமுடி பொலிவுக்கும் நல்லது. சர்க்கரை வியாதி உள்ளவர்களும் பயப்படாமல் சாப்பிடலாம்.

இனிமே தர்பூசணியை இப்படி வாங்கி திட்டு வாங்காம தப்பிச்சுக்கோங்க!!

From around the web