வீட்டில் ஈ தொல்லையா?!

கோடைக்காலம் வந்தாலே நுங்கு, பலாப்பழம், மாம்பழம், நாவல்பழம் என புழங்கும். இதன் வாசனைக்கும், நிறத்துக்கும் மயங்கி ஈக்கள் வீட்டுக்குள் வர ஆரம்பிக்கும். கூடவே எறும்பும் வரும். ஈ, எறும்பு தொல்லையிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ்களை இன்று பார்க்கலாம்! உலகம் முழுக்க 1.20 மில்லியன் ஈக்கள் உள்ளன. அவை முழுமையாக வளரும் வரையில் உருவத்தின் அளவில் மாற்றமடைந்து கொண்டே இருக்கும். வீடுகளில் காணப்படும் ஈக்கள் ‘மஸ்கா டொமஸ்டிகா’ என்று அறிவியல்ரீதியாக அழைக்கப்படுகின்றன. மனிதனைக் கடிக்காமல், காலரா, வயிற்றுப்போக்கு, டைபாய்டு
 
வீட்டில் ஈ தொல்லையா?!

கோடைக்காலம் வந்தாலே நுங்கு, பலாப்பழம், மாம்பழம், நாவல்பழம் என புழங்கும். இதன் வாசனைக்கும், நிறத்துக்கும் மயங்கி ஈக்கள் வீட்டுக்குள் வர ஆரம்பிக்கும். கூடவே எறும்பும் வரும். ஈ, எறும்பு தொல்லையிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ்களை இன்று பார்க்கலாம்! உலகம் முழுக்க 1.20 மில்லியன் ஈக்கள் உள்ளன. அவை முழுமையாக வளரும் வரையில் உருவத்தின் அளவில் மாற்றமடைந்து கொண்டே இருக்கும். வீடுகளில் காணப்படும் ஈக்கள் ‘மஸ்கா டொமஸ்டிகா’ என்று அறிவியல்ரீதியாக அழைக்கப்படுகின்றன. மனிதனைக் கடிக்காமல், காலரா, வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற வியாதிகளைப் பரப்புபவதோடு, கடுமையான கண் தொற்று நோய்களை ஏற்படுத்துகின்றன.

வீட்டில் ஈ தொல்லையா?!

பொதுவாக ஈக்கள் சுத்தமில்லாத இடத்தில்தான் இருக்கும். வீட்டினை சுத்தமாய் வைத்திருந்தாலே ஈக்கள் வருவதை தடுக்கமுடியும். கற்பூரத்தை ஏற்றி தங்கியிருக்கும் இடம் முழுவதும் அதன் நறுமணத்தைக் காட்டினால், ஈக்கள் உடனடியாக இடத்தை காலி செய்து ஓடி விடும். மருத்துவ குணமிக்க துளசிக்கு, ஈக்களை உறுதியாக விரட்டியடிக்கும் திறனும் இருக்கு என்பது தெரியுமா? எனவே, உங்களுடைய வீட்டில் துளசியை வளர்த்து ஈக்களை விரட்டியடியுங்கள்.

புதினா, லாவெண்டர் அல்லது சாமந்தி ஆகியவைகளும் ஈக்களை வெளியே தள்ளக் கூடிய திறன் கொண்டவையாகும். லாவெண்டர், யூகலிப்டஸ், பெப்பர்மின்ட் மற்றும் லெமன் கிராஸ் ஆகியவற்றில் மென்மையான நறுமணம் மட்டுமல்லாமல், ஈக்களை விரட்டியடிக்கும் குணமும் உள்ளன. உங்கள் வீட்டின் ஹால், பெட்ரூம் மற்றும் சமையலறை ஆகிய இடங்கள் என அனைத்து இடங்களிலும் இந்த எண்ணெய்களை தெளித்து வைத்தால் ஈக்களை விரட்ட முடியும். கிரீன் ஆப்பிள் சோப் கிரீன் ஆப்பிள் லிக்விட் சோப்புகள் ஈக்களை கவர்ந்திழுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, ஒரு ஜாடி தண்ணீரில் 2 தேக்கரண்டிகள் கிரீன் ஆப்பிள் லிக்விட் சோப்பை கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பழத்தின் நறுமணத்தைக் கண்டு கவர்ந்திழுக்கப்படும் ஈக்கள் ஜாடியிலுள்ள நீரில் அமிழ்ந்து இறந்துவிடும். இந்த வகையில் வீடுகளில் உள்ள ஈக்களை உங்களால் பிடிக்க முடியும்.

ஆப்பிள் மற்றும் கிராம்பு ஒரு ஆப்பிளில் சில கிராம்புகளை செருகி விட்டு, உங்கள் வீட்டு சமையலறையிலோ அல்லது ஈக்கள் அதிகமாக இருக்கும் இடங்களிலோ வைத்திருந்தால் ஈக்களை விரட்டி விட முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வீட்டை சுத்தம் செய்வதற்கும்கூட கிராம்பு எண்ணெயை பயன்படுத்தலாம். கிராம்பின் வாசனையை பொறுக்காத ஈக்கள், அடுத்த நொடியே வீட்டை விட்டு ஓடிவிடும். ஆப்பிள் சீடர் வினிகர் வினிகரை வைத்து ஈக்களை விரட்டுவது மிகவும் திறமையான வழிமுறைகளில் ஒன்றாகும். ஒரு கிண்ணத்தில் சிறிதளவு ஆப்பிள் சீடர் வினிகரை வைக்கவும். ஈர்ப்பு விசையை உருவாக்கவும், ஈக்கள் வெளியேறி ஓடுவதை தவிர்க்கவும் இந்த கலவையுடன் லிக்விட் டிடர்ஜென்ட்டை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கலவையின் நறுமணம் ஈக்களை கவர்ந்திழுத்து கொன்று விடும். ஒருமுறை இந்த கலவையால் ஈர்க்கப்பட்டு வரும் ஈக்கள், முழுமையாக மூழ்கும் வரை வெளியேற முடிவதில்லை.

வீட்டில் ஈ தொல்லையா?!

குப்பைகளின் மேலாக வெள்ளரிக்காயை கீற்றாக அறுத்து வைப்பதன்மூலம் ஈக்கள் முட்டையிடுவதை தவிர்க்க முடியும். ஏனெனில் வெள்ளரிக்காய் வாசனையில் ஈக்கள் வசிப்பதில்லை. மேலும், சில வெள்ளரிக்காய் துண்டுகளை உங்கள் வீட்டை சுற்றிலும் வைத்திருப்பதன் மூலம், ஈக்கள் வீட்டுக்குள் வருவதை தவிர்க்கமுடியும். சர்க்கரை மற்றும் சோள மாவு ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, ஒரு கனமான பிரௌன் பேப்பரில் தடவுங்கள். அந்த பேப்பரின் ஒரு மூலையில் துளையிட்டு, வீடு அல்லது அறைக்கு வெளியே தொங்க விடுங்கள். இதன் மூலம் ஈக்கள் வீட்டுக்குள் அல்லது அறைக்குள் நுழைவதை தவிர்க்க முடியும்.

சிறிதளவு சிவப்பு மிளகாயை எடுத்துக் கொண்டு, அவற்றை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் போடுங்கள். இதனுடன் சிறிதளவு தண்ணீரை விட்டு, நன்றாக கலக்குங்கள். இப்பொழுது, இந்த கலவையை வீடு முழுவதும் தெளியுங்கள். ஈக்கள் கொல்லப்படும். வெள்ளை ஒயினை, பாத்திரத்தை கழுவும் திரவத்துடன் கலந்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும். இந்த கலவையால் ஈர்க்கப்பட்டு வரும் ஈக்கள், விஷத்தால் தாக்கப்பட்டு இறந்து விடுகின்றன. இலவங்கப் பட்டையை ஏர் ஃப்ரெஷ்னராக பயன்படுத்தினால், அதன் நறுமணம் பொறுக்காமல் ஈக்கள் ஓடி விடும். பிளாஸ்டிக் தண்ணீர் பைகள் காலியான பிளாஸ்டிக் தண்ணீர் பைகளை வீட்டுக்குள் நுழையும் இடங்களில் வைத்திருந்தால், ஈக்கள் நுழைவதை தடை செய்ய முடியும்.

இப்படியெல்லாம் செய்தால் ஈக்கள் தொல்லை இனி இல்லவே இல்லை…

From around the web