பாஜகவில் இணையும் வி.பி. துரைசாமி: உடைகிறதா திமுக?

நேற்று திமுக துணைப் பொதுச்செயலாளர் விபி துரைசாமி பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் இன்று அவர் பாஜகவில் இணையவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் அவர்களை சமீபத்தில், தி.மு.க., துணை பொதுச் செயலர், வி.பி.துரைசாமி சந்தித்தார். இந்த சந்திப்பால் அதிர்ச்சி அடைந்த திமுக, உடனடியா அவரை பதவியில் இருந்து நீக்கியது தனது பதவி நீக்கப்பட்டது குறித்து பேட்டியளித்த விபி துரைசாமி, ‘பதவியை பறித்தது எதிர்பார்த்த ஒன்று தான் என்றும், இதில்
 
பாஜகவில் இணையும் வி.பி. துரைசாமி: உடைகிறதா திமுக?

நேற்று திமுக துணைப் பொதுச்செயலாளர் விபி துரைசாமி பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் இன்று அவர் பாஜகவில் இணையவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் அவர்களை சமீபத்தில், தி.மு.க., துணை பொதுச் செயலர், வி.பி.துரைசாமி சந்தித்தார். இந்த சந்திப்பால் அதிர்ச்சி அடைந்த திமுக, உடனடியா அவரை பதவியில் இருந்து நீக்கியது

தனது பதவி நீக்கப்பட்டது குறித்து பேட்டியளித்த விபி துரைசாமி, ‘பதவியை பறித்தது எதிர்பார்த்த ஒன்று தான் என்றும், இதில் ஆச்சரியம் எதுவுமில்லை என்றும், நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தனக்கு ஏற்கனவே தெரியும் என்றும் தி.மு.க.,வில் தனக்கு எதிராக சிலர் சதி செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் திமுக தலைவர் முக ஸ்டாலின், தன் அருகில் இருப்பவரின் சொல் கேட்டு செயல்படுவதாகவும் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்திற்கு சென்று பாஜகவில் இணையவிருப்பதாகவும், அவருடன் மேலும் சில திமுகவினர் இணையவிருப்பதாகவும் கூறப்படுவதால் திமுக உடைகிறதா? என்றா கேள்வி தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

From around the web